விண்ணை முட்டும் காய்கறிகள் விலை:


இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு காய்கறிகளின் விலையானது உயர்ந்துள்ளது. இலங்கையின் மிக மோசமான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருக்கும் மக்களை, மேலும் இது பாதித்துள்ளது. இலங்கை மக்களின் வாழக்கை தரத்தினை குறைக்கும் வகையில், தற்போது பணவீக்கமானது மேலும் அதிகரித்துள்ளது. ஆகையால் பெரும்பாலான காய்கறிகளின் விலை இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு கிலோவுக்கு ரூ .145 ஆக இருந்த அரிசியின் விலை, தற்போது ரூ. 230 ஆக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோவுக்கு (இலங்கை ரூபாய்) 200 ரூபாயாகவும், உருளைக்கிழங்கின் விலை கிலோவுக்கு 220 ரூபாயாகவும் உயர்ந்தது. தக்காளி கிலோ ரூ.150 க்கும், கேரட் ஒரு கிலோ ரூ .490 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




பணவீக்கம்:inflation


இலங்கையில் குறிப்பாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எரிபொருள் தட்டுப்பாடு, மற்ற பொருட்களின் உயர்வுக்கு வழிவகுத்தது. மேலும் ரசாயன உரத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால விவசாயத்துறையும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இதனால உணவுப் ப்பொருட்களுக்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருட்களின் விலை உயர்ந்தது. மேலும் கொரோனா தொற்றால் விமான போக்குவரத்து உள்ளிட்டவை பெரிதும் தடை பெற்றது. இதனால் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு முழுவதும்  பணவீக்கமானது  50 சதவீதத்திற்கு மேல் நீடிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


உணவு உட்கொள்ளுவது குறைவு:


ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 80.1 சதவீதத்தை எட்டியதாகவும், அதே நேரத்தில் போக்குவரத்து செலவுகள் 128 சதவீதம் அதிகரித்ததாகவும் தரவுகள் காட்டுகின்றன. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், 70 சதவீத குடும்பங்கள் இப்போது உணவு உட்கொள்ளுவதை குறைந்து வருவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.


Also Read: Srilanka New President: இலங்கையில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் புதிய அதிபரை நியமிக்க முடிவு என தகவல்..


Also Read: Sri Lanka Crisis; மக்கள் போராட்டத்தின் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாட்டில் தங்கியுள்ளார், இலங்கை அதிபர் ராஜபக்சே கோட்டபய.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண