அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் சமீபத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து உடனடியாக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கைது செய்துள்ளனர். அந்த நபரை பிடித்த பிறகு காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்ன?


கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பீட்சா டெலிவரி செய்ய ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றுள்ளார். அவர் டெலிவரியை முடித்து லிஃப்டில் செல்ல முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் இருந்த வந்த நபரை இவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்து லிஃப்டிற்குள் தள்ளி பலமாக தாக்கியுள்ளார். அவருடைய தாக்குதல் மற்றும் பிடியிலிருந்து விலகி தப்பியுள்ளார். அத்துடன் உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கும் அழைத்து தகவல் அளித்துள்ளார். 


அதன்பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி 55 வயதான ஒஸ்வால்டோ ஃபிகுரோ என்ற நபரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏற்கெனவே பாலியல் புகார் தொடர்பாக 70 வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. இத்தனை புகார்களுக்கு உள்ளாகியும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் தொடர்ந்து சிறைவாசத்தை தவிரத்து வந்துள்ளார். 




இவருடைய புகார் பின்னணியை பார்த்து காவல்துறையினரே பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இவ்வளவு முறை பாலியல் புகாருக்கு உள்ளான நபர் எப்படி இன்னும் வெளியே இருக்கிறார். நம்முடைய சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற அளவிற்கு காவல்துறையினரே கருத்து தெரிவிக்கும் வகையில் ஒஸ்வால்டோவின் புகார்கள் அமைந்துள்ளன. 


அதேசமயம் இந்த நபரால் தாக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். காவல்துறையினர் ஒஸ்வால்டோவை கைது செய்த செய்தியை கேட்டு அப்பெண் சற்று ஆறுதல் அடைந்துள்ளார். மேலும் இவ்வளவு விரைவாக அந்த நபரை கைது செய்தது தொடர்பாக அப்பெண் காவல்துறைக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இப்படி பல முறை பாலியல் புகாரில் சிக்கியும் சிறைக்கு செல்லாமல் இருக்கும் நபருக்கு இம்முறை தகுந்த தண்டனை வாங்கி தரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 


மேலும் படிக்க....


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க: ''பண்ணதே நான் தான்.!'' நியூ ஹேர்ஸ்டைல் கேள்விக்கு ஷாக் கொடுத்த எலன்!