சோஷியல் மீடியாவில் படு ஆக்டீவாக இருப்பவர் தொழிலதிபர் எலன் மஸ்க். குறிப்பாக ட்விட்டரில். உலகத்தில் என்ன நடந்தாலும் அது தொடர்பாக ட்வீட் செய்வதும் அதனை பேசுபொருளாக்குவதுமே அவரது ஸ்டைல். இந்த நிலையில் அவரது  போட்டோ ஒன்று ட்ரெண்டாக அது தொடர்பாக படாரென பதிலளித்துள்ளார் எலன். எலானின் நியூ ஹேர்ஸ்டைலை பதிவிட்டு 'நைஸ் ஹேர்ஹெட்' என Tesla Silicon Valley Club என்ற ட்விட்டர் பக்கம் பதிவிட, அதற்கு பதில் அளித்த எலன் மஸ்க், நானே வெட்டுக்கிட்டேன் என பதிலளித்துள்ளார். 


இந்த பதிவுக்கு ட்விட்டரில் நகைச்சுவையாக பதிலளித்துள்ள பலரும் உலக பணக்கார லிஸ்டில் இருக்கும் நீங்கள் ஏன் ஒரு சலூனுக்குக் கூட போகவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர் அவருக்கு சலூனுக்கு போகக் கூட நேரம் இல்லாமல் இருக்கும் என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர். 




சமீபத்தில் ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தி பங்குகளை விற்று ஆச்சரியப்படுத்தினார் எலன். 
எலன் மஸ்க் தனது 10 சதவீத பங்குகளை விற்க வேண்டுமா என்று தன்னை ட்விட்டரில் பின்தொடரும் 6.3 கோடி பேரிடம் சில நாள்களுக்குமுன் கேட்டு ஒரு ட்விட்டர் போல் (வாக்கெடுப்பு) வைத்திருந்தார். அந்த வாக்கெடுப்பு முடிவில் அவர் பங்குகளை விற்கவேண்டும் என்பதற்கு அதிகமானோர் வாக்களித்ததால், இரண்டு நாட்களில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16 சதவீதம் சரிந்தன.






டெஸ்லா உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாகும். இதன் பங்குச் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் 70 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் இந்த டெஸ்லா நிறுவனத்தில் இருந்து எலன் மஸ்க்கின் அறக்கட்டளை சுமார் 36 லட்சம் பங்குகளை விற்றிருக்கிறது. விற்ற பங்கின் மதிப்பு சுமார் 28,000 கோடி இந்திய ரூபாய் ஆகும். 







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண