எகிப்தில் ஆயா யூசெப் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். இவர் தனது சக ஊழியர்களுடன் நைல் நதியில் ஒரு படகில் நடனமாடும்போது அவர்களில் ஒருவர் அதை வீடியோவாக எடுத்தார். அதனை ஏற்காத ஆயா யூசெப், தன் அனுமதியின்றி சக ஊழியர் படம் எடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.


அந்த வீடியோவில், யூசெப், தலையில் முக்காடு மற்றும் நீண்ட கை உடையணிந்து, ஆண்களுக்கு மத்தியில் நடனமாடியதாக கூறப்படுகிறது. பெல்லி நடனம் என்பது எகிப்தில் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. ஆனால், பெண்கள் பொது இடங்களில் நடனமாடுவதை தற்போது அங்கு பலர் ஏற்றுக்கொள்வதில்லை.


இந்தச் சூழலில் அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 


இதுகுறித்து ஒருவர் கூறுகையில், இது நாம் வாழும் மோசமான காலத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது என்றார். இதற்கிடையே பொது விழாவிலோ அல்லது தனது மாணவர்கள் முன்னிலையிலோ தான் நடனமாடவில்லை என்று யூசுப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.


ஆசிரியை பணியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, எகிப்தில் உள்ள பெண்கள் உரிமை ஆர்வலர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற பெண்கள் யூசுப்பை ஆதரிப்பதற்காக தங்கள் நடனத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


எகிப்திய பெண்கள் உரிமைகளுக்கான மையத்தின் தலைவர் டாக்டர் நிஹாத் அபு கும்சான், யூசெப்புக்கு வேலை வாய்ப்பை வழங்குவதாகவும், மேலும் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சட்டப்பூர்வ புகார் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


அனுமதியின்றி தன்னைப் படம்பிடித்து, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்வது தனது தனியுரிமையை மீறுவதாகவும், அதற்கு காரணமான நபர் மீது வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் ஆசிரியை  கூறியுள்ளார். தான் இனி நடனம் ஆடப்போவதில்லை எனவும் அப்பெண் விரக்தியில் கூறியுள்ளார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Breastfeeding -Covid 19 | தாய்ப்பாலில் வைரஸ் கண்டறியப்படுகிறதா? : பாலூட்டும் தாய்மார்களுக்கு WHO விளக்கும் தகவல்கள் இதோ


பிரபல டென்னிஸ் வீரரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய டிவி தொகுப்பாளர்கள்.. இணையத்தில் வைரலான வீடியோ!


watch video: மனிதனை துரத்தும் மலை சிங்கம்..உயிருக்கு பயந்து ஓட்டம்..! வெளியான திக்.. திக்.. வீடியோ!