கணவன்மார்கள் சம்பாதிக்கும் குறைந்தளவு ஊதியத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை திறம்பட நடத்தும் மனைவிமார்களும் இருக்கிறார்கள். கணவன்மார்கள் சம்பாதிக்கும் அதிகளவு பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்யும் மனைவிமார்களும் இருக்கிறார்கள். என்னதான் செலவு செய்தாலும் எல்லாவற்றிற்கும் ஓரளவு வரைமுறை இருக்கும்.


ஆனால், கணவனின் பணத்தில் தினமும் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை ஷாப்பிங் செய்யும் மனைவியை பற்றி கேள்விப்பட்டது உண்டா? அப்படி ஒரு கணவனும் மனைவியும் துபாயில் இருக்கிறார்கள். சவுதி அரேபியாவில் வசிப்பவர் ஜமால். இவர் அந்த நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவர். இவர் துபாய் பல்கலைகழகத்தில் படித்தபோது சவுதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.




70 லட்சம் செலவு:


இவர் தன்னுடைய தினசரி செலவிற்காக மட்டும் 3 ஆயிரத்து 600 யூரோ முதல் 72 ஆயிரம் யூரோக்கள் வரை அவரது கணவர் பணத்தில் செலவு செய்து வருகிறார். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய் ஆகும். இதை அவர் ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளார். சவுதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய விடுமுறையை சொகுசாக அனுபவிக்கும் புகைப்படங்களையும், மிகவும் ஆடம்பர விடுதியில் அவர் செலவிடும் நேரத்தையும் போட்டோக்களாக பதிவிட்டு வருகிறார்.






சவுதி தன்னுடைய தினசரி வாழ்வில் எப்போதும் ஆடம்பர துணிகளை மட்டுமே அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். வெளியில் செல்வதற்காக கொண்டு செல்லும் கைப்பைகளும் லட்சக்கணக்கான மதிப்பு கொண்டதாகவே உள்ளது. சவுதி – ஜமால் தம்பதியினர் சில மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.


ஹோட்டலில் சாப்பிடவே 96 ஆயிரம்:




சவுதி தன்னுடைய ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின்போதும் 15 லட்சம் வரை தன்னுடைய துணிக்கும் கைப்பைக்கும் செலவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றபோது ரூபாய் 12.78 லட்சம் செலவு செய்துள்ளனர். சவுதி தன்னுடைய நகத்தை சுத்தம் செய்வதற்காக மட்டும் ரூபாய் 63 ஆயிரம் செலவு செய்கிறார். சவுதியும் ஜமாலும் உணவகத்திற்கு சாப்பிட வேண்டுமென்றால் ரூபாய் 96 ஆயிரம் வரை செலவு செய்து வருகின்றனர்.


இதில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் 5வது திருமணம் ஆகும்.


மேலும் படிக்க: America: இந்தியாவில் பிரிந்த உயிர்.. 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா கொண்டு செல்லப்படும் ராணுவ அதிகாரி உடல்..!


மேலும் படிக்க: புதினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா..? ரகசிய சந்திப்புக்கு பின் நடந்தது என்ன..? பகீர் பின்னணி..!