அமெரிக்காவில் கோடீஸ்வரர்களின் குழந்தைகளை பராமரிக்கும் வேலைக்காக ஒரு நாளைக்கு சுமார் 1.6 லட்சம் சம்பாரிக்கிறாராம் க்ளோரியா ரிச்சர்ட்ஸ்.


குழந்தைகளை பார்த்துக்கொள்வது என்பது சிரமமான காரியம்தான். ஆனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு இவ்வளவு மார்கெட் இருக்கிறதா என்பது இப்போது தான் தெரிகிறது. அதிலும் கோடிஸ்வரர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்றால் அதற்கு நமக்கு தனித்திறமைகள் என்ன இருக்க வேண்டும் .


அமெரிக்காவைச் சேர்ந்தவர் க்ளோரியா ரிச்சர்டஸ். இவருக்கு 34 வயதாகிறது.  க்ளோரியாவில் வேலை என்னத் தெரியுமா? அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது. இதற்காக அவர் வாங்கும் சம்பளம் ஒரு நாளைக்கு 2000 டாலர். இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் ரூபாய். சம்பளம் மட்டும் இல்லை. இந்த தொழிலில் அவருக்கு இன்னும் நிறைய சலுகைகள் எல்லாம் இருக்கின்றன. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு  ப்ரைவேட் ஜெட்டை மட்டுமே பயன்படுத்துகிறார் க்ளோரியா. டெஸ்லா, போர்ஷி ஆகிய கார்கள் வைத்திருக்கிறார். இந்த செலவை எல்லாம் அவரது முதலாலிகளே பார்த்துக்கொள்கிறார்கள்.


தனது மொத்த வருமானத்தில் 80 முதல் 90 சதவீத வருமானம் குழந்தைகளை பராமரிக்கும் வேலையில் இருந்து சம்பாரிப்பதாக கூறுகிறார் க்ளோரியா.


”ஒரு வருடத்தின் தொடக்கத்தில் சில மாதங்கள் தொடர்ந்து நான் வேலை செய்தால் போதும் எஞ்சியிருக்கும் மொத்த வருடத்திற்கும் நான் எந்த வேலைக்கும் செல்லத் தேவையில்லை. என் மனம் விரும்பிய இடங்களுக்கு நான் பயணம் செய்யலாம்’ எனக் கூறுகிறார் க்ளோரியா.


அதே நேரத்தில் இவ்வளவு வருமானம் வரும் ஒரு வேலையில் எப்படியான சவால்கள் இருக்குமென்றும் கூறுகிறார் க்ளோரியா. “குழந்தைகளுடன் நெருக்கமாக  உரையாடக்கூடிய என்னுடையத் திறமையே என்னை இந்த வேலைக்குத் தகுதியானவராய் ஆக்குகிறது. அதே நேரத்தில் கோடீஸ்வரர்களின் குழந்தைகளை பராமரிப்பது என்பது எளிதானதான காரியம் இல்லை. என்னுடைய பெரும்பாலான நேரங்களில் நான் குழந்தைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு செலவிடுகிறேன். உங்களுடைய வேலை பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கான சம்பளம் தரப்படாமல் போகலாம்.


நான் ஒரு கருப்பினப் பெண் என்பதால் கலாச்சார ரீதியான சிக்கல்களையும் தான் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. பல கோடிஸ்வரர்களின் குடும்பங்களின் முக்கியமான தருணங்களில் நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன். சில குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. அவர்களது நெருங்கிய சொந்தங்களின் இறப்பில் நான் அவர்களுக்கு துணையாக இருந்திருக்கிறேன். இந்த மாதிரியான நேரங்களில் தோல் சாய்ந்து அழுவதற்கு நான் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கிறேன். ஆனால் அடுத்த நொடியில் அவர்கள் உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பும் இதில் உள்ளது” என்கிறார்.