32 வயதான அமெரிக்க பெண் ஒருவரின் உடலில் இருந்து 3 ஒட்டுண்ணியை டெல்லி மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 


அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வலது கண்ணில் வீக்கம் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கண் சிவத்தல், அடிக்கடி வீங்கிக் கொள்வதுபோன்ற சிக்கல் இருந்துள்ளது. கண்ணில் மட்டுமின்றி  முதுகுப்பகுதியிலும் கையிலும் வித்தியாசமான உணர்வும் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய சொந்த நாடான அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஏதோ ஒவ்வாமை எனக் கருதிய மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் அவருக்கு அதே சிக்கல் தொடர்ந்துள்ளது. இதற்கிடையே அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவும் வந்துள்ளார்


இந்தியா...


இந்தியா வந்த அப்பெண் தொடர்ந்து அதே சிக்கலில் இருந்துள்ளார். அதனால் இந்தியாவில் உள்ள அவரது நண்பர்கள் அவரை டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அமெரிக்கப் பெண்ணை நன்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் ஏதோ அசைவதை கண்டுபிடித்து பரிசோதனை செய்துள்ளனர். பின்பு அவரது உடலுக்குள் 3 ஒட்டுண்ணிகள் நுழைந்திருப்பதை கண்டிபிடித்தனர்.




Raging bull attacks biker: வாடா .. வந்து பாருடா... சைக்கிளில் சென்றவரை முட்டித்தூக்கிய காளை.. வைரல் வீடியோ..!






அமேசான் காடு...


அமெரிக்காவில் இருந்த போது அப்பெண் அமேசான் காட்டுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒட்டுண்ணியான மனித பூச்சி என்று அழைக்கப்படும்  human botflies அவரது உடலுக்குள் ஊடுறுவி உள்ளது. நமக்கே தெரியாமல் நம் உடலுக்குள் ஊடுறுவும் ஆற்றல் படைத்தது அந்த ஒட்டுண்ணி. அதன்படி அப்பெண்ணின் கண் இமை, முதுகு, முன் கை பகுதியில் அந்த ஒட்டுண்ணி நுழைந்துள்ளது. இது தெரியாமல் வழக்கமாகவே இருந்துள்ளார் அப்பெண். பின்னர் உடலை சிதைத்து ஒட்டுண்ணி நகர்ந்து வாழத்தொடங்கியபோது அப்பெண்ணுக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டுள்ளது.


அறுவை சிகிச்சை..


ஒட்டுண்ணியை கண்டிபிடித்த  மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சையை செய்து அவற்றை அகற்றியுள்ளனர். இதனால் தொல்லைகளை சந்தித்து வந்த அமெரிக்க பெண் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இந்த ஒட்டுண்ணிகளை கவனிக்காமல் விட்டால் மனித திசுக்களை ஊடுறுவி பாதிப்பை ஏற்படுத்தும். இது மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய சிக்கலையும் ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தையும் ஏற்படுத்தும்.




ஹாரிபாட்டரில் வரும் டாபி.. 90 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் ஆர்ட்வார்க் குட்டி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண