ஹாரிபாட்டரில் வரும் டாபி.. 90 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த முதல் ஆர்ட்வார்க் குட்டி!

உடலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சுருக்கப்பட்ட தோல், பெரிய தொங்கும் காதுகள் மற்றும் அழகான, அப்பாவித்தனமான கண்களைக் கொண்ட  சிறிய உடல் இதுதான் ஹாரிபாட்டரில் வரும் டாபியின் உருவம்

Continues below advertisement

90 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் முதல் ஆர்ட்வார்க் லண்டன் உயிரியியல் பூங்காவில் பிறந்துள்ளது. ஆர்ட்வார்க் என்பது பூமிக்கு அடியில் பொந்து இட்டு வசிக்கும் உயிரினம். முன்வரலாற்று காலம் தொடங்கியே இந்த உயிரினம் பூமியில் இருந்து வருகிறது.  தற்போது பிறந்துள்ள இந்த குட்டிக்கு டாபி எனப் பெயரிட்டுள்ளனர். ஹாரிபாட்டர் கதையில் வரும் டாபி எனும் கேரக்டரைப் போலவே இந்த உயிரினம் இருப்பதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

உடலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சுருக்கப்பட்ட தோல், பெரிய தொங்கும் காதுகள் மற்றும் அழகான, அப்பாவித்தனமான கண்களைக் கொண்ட  சிறிய உடல் இதுதான் ஹாரிபாட்டரில் வரும் டாபியின் உருவம்.இந்தப் பெயர்தான் தற்போது ஆர்ட்வர்க்குக் வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் செஸ்டர் மிருகக் காட்சி சாலையில் 90 ஆண்டுகளில் பிறந்துள்ள முதல் குட்டி ஆர்ட்வார்க் இது. பிறந்த நேரத்தில் டாபியின் பாலினம் தீர்மானிக்கப்படவில்லை. வெள்ளியன்றுதான் டாபி ஒரு பெண்குட்டி என  செஸ்டர் ஜூ ட்விட்டரில் அறிவித்தது.


பேபி ஆர்ட்வார்க்கின் படத்தைப் பகிர்ந்த ட்வீட், “இது ஒரு பெண். எங்கள் புதிய ஆர்ட்வார்க் கன்று டாபி ஒரு பெண் குழந்தை என்பதை வெளிப்படுத்த நாங்கள் சந்திரனுக்கு மேல் இருக்கிறோம்.

மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்துள்ள ஆர்ட்வார்க் பற்றி செஸ்டர் மிருகக்காட்சிசாலையின் குழு மேலாளரான டேவ் வைட் கூறுகையில் "இது மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் ஆர்ட்வார்க், எனவே இது எங்களுக்கு ஒரு முக்கியமான அடையாளமாகும். அதனால் நாங்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறோம். அதன் அம்மாவின் அருகில் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கண்டவுடன், ஹாரி பாட்டர் கதாபாத்திரமான டாபியுடனான அதன் விசித்திரமான ஒற்றுமையை நாங்கள் கவனித்தோம், அதனால் அதுதான் தற்போதைக்கு இந்த கன்றுக்குட்டிக்கு செல்லப்பெயர்!”

மேலும், “டாபி தற்போது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு உயிரியல் பூங்காவில் இருக்கும் அனைவராலும் வளர்க்கப்படுகிறது. ஐந்து வாரங்களுக்கு இரவு முழுவதும் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை அந்தக் குட்டிக்கு உணவளிக்கப்படுகிறது” என்று அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



ஆர்ட்வர்க்குகள் பிறந்த குட்டிகளிடம் சிறிது கரடுமுரடாக நடந்துகொள்ளும் இயல்புடையவை. ஆனால் டாபி மிகவும் புஞ்சையான உடலுடன் இருப்பதால் தாயின் இந்த இயல்பைத் தாங்கமுடியாது அதனால் தாயிடமிருந்து பிரித்து தனியாகப் பாதுகாத்து வளர்க்கிறோம். மேலும் எதிர்காலத்தில் அதற்கான தனி காப்பகமும் உருவாக்கப்படும் என ஆர்ட்வர்க்கை தனியே வளர்ப்பதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர். 

பொதுவாகக் ஆப்ரிக்காவின் சப் சஹாரன் காட்டுப்பகுதியில் இந்த ஆர்ட்வார்க்குகள் காணப்படுகின்றன. இருந்தாலும் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் அதன் கறிக்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் 109 ஆர்ட்வார்க்குகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola