கலிபோர்னியாவில் சைக்கிள் ஓட்டி வந்த நபரை காளை ஒன்று முட்டித்தூக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா கலிபோர்னியாவின் பேக்கர்ஃபீல்டு என்ற இடத்தில் பியாங்கி ராக் காப்லர் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பந்தயத்தின் போது சைக்கிளில் வந்த டோனி இண்டர்பிட்சின் என்பவரை அங்கு நின்று கொண்டிருந்த காளை திடீரென்று முட்டித்தூக்கி எறிந்தது. இந்தத்தாக்குதலில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
மீண்டும் தாக்கிய காளை
அத்தோடு மாடு நிற்கவில்லை. தொடர்ந்து, கீழே விழுந்த டோனியை மீண்டும் தாக்கிய அந்த காளை மீண்டும் அவரை முட்டித்தூக்கி எறிந்தது. இந்த சம்பவத்தை சகப்போட்டியாளரான ரிச்சர்ட் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இவரும் அந்த வழியாக சைக்கிள் ஓட்டி வந்திருக்கிறார். ஆனால் அதிஷ்டவசமாக அவரை அந்த காளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அதன் பின்னர் டோனியை காளை தாக்கியிருக்கிறது.
இது குறித்து டோனி கூறும் போது, “ அந்தத்தாக்குதல் எனக்கு நிறைய வலியை தந்திருக்கிறது. நான் இதுபோல இதற்கு முன் காயப்பட்டதில்லை. மாட்டின் முதல் தாக்குதல் பிறகு, எனது கழுத்து தரும் வலி என்னை கொன்று கொண்டிருக்கிறது. அதுதான் மையப்புள்ளி. இப்போது அந்த வலி கீழ் முதுகில் இருக்கிறது" என்று டோனி கூறியிருக்கிறார்.