Crime : தரையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்...கேமராவில் பதிவான கோரம்.. நாட்டை உலுக்கிய சம்பவம்..

கடந்த ஜூன் 10 அன்று பார்பிக்யூ உணவகத்தின் கேமராக்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சியில் ஒரு ஆண் ஒரு பெண்ணை அறைந்து தெருவுக்கு இழுத்துச் செல்வதைக் காட்டியது.

Continues below advertisement

சீனாவின் டாங்ஷான் நகரத்தில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தின் பாதுகாப்பையும் தற்போது கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஒரு உணவகத்திற்கு வெளியே நான்கு பெண்களை ஆண்கள் குழுவொன்று தாக்கிய சமீபத்திய வன்முறைக்குப் பிறகு, சீன நகரமான டாங்ஷான் அதன் கவுரவ "நாகரிக" (Honorary Civilized Status)அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் நீதி கோரியும் வருகின்றனர்.

Continues below advertisement

கடந்த ஜூன் 10 அன்று பார்பிக்யூ உணவகத்தின் கேமராக்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சியில் ஒரு ஆண் ஒரு பெண்ணை அறைந்து தெருவுக்கு இழுத்துச் செல்வதைக் காட்டியது. மற்ற ஆண்களும் சேர்ந்து, அந்தப் பெண்ணுடன் வந்த தோழிகளைத் தாக்கினர் மற்றும் இரண்டு பெண்களை தெருவின் ஓரத்தில் விட்டுவிட்டனர்.

அந்த இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) மருத்துவமனையில் உள்ளனர்.இந்த சம்பவத்தில் தாக்குதல் தொடர்பாக ஒன்பது பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கொடூர தாக்குதல் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இது சீனாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய பெரிய அளவிலான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

சீன நகரமான டாங்ஷானின் வடக்கு ஹெபெய் மாகாணத்தில் பெண்கள் மீதான இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சமூக ஊடகத் தளமான வெய்போவில் ஒரு ஹேஷ்டேக் வலம் வரத் தொடங்கியது. ஹேஷ்டேக் சம்பவத்தை அடையாளம் காட்டியது. இது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த உடனேயே அது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்த வீடியோ பல நூறு மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் வீடியோக்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து லட்சக்கணக்கான மக்கள் அந்த வீடியோவில் கருத்து தெரிவித்தனர். இந்த இணையக் குரல்களில் பெரும்பாலானவை பெண்களுக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வலுத்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு அமெரிக்காவின் கால்பந்து அணி வீரரான ரே ரைஸ் அவரது அப்போதைய ஃபியான்ஸேயும் தற்போது மனைவியுமான ஜேனே பால்மர் ரைஸை ஒரு கிளப்பிலிருந்து அடித்து தரையில் இழுத்து வந்தார். இந்த வீடியோ கேமிராவில் பதிவாகி பெரிய அளவில் சர்ச்சையானது. ஜேனே பிறகு ரே ரைஸை மணம் முடித்துக் கொண்டாலும் இன்றுவரை பெண்கள் மீதான வன்முறைக்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டு வருகிறது. தற்போது டாங்ஷான் மாகாணத்தில் நடந்த சம்பவம் வீடியோ கேமிராவில் பதிவானதை அடுத்து பலரும் இந்தச் சம்பவம் ரே ரைஸின் வன்முறைச் சம்பவம் போல இருப்பதாகக் கருத்து கூறி வருகின்றனர்.

சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் வலுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola