அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள்:

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தல்படி இன்று (23.05.2025) முதல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் ஐந்தாவது ஆண்டின் தொடக்கவிழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 07.05.2025 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

இப்பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுப்படி போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தல்படி, இன்று (23.05.2025) முதல் 23 புதிய அதி நவீன குளிர்சாதன பேருந்துகள் கீழ்கண்ட தடங்களில் இயக்கப்படுகிறது.

அவற்றின் விவரம்:

தடம் பேருந்துகளின் எண்ணிக்கை
திருச்சி - திருப்பதி 2
சென்னை கிளாம்பாக்கம் - பெங்களூரு 4
சென்னை கோயம்பேடு - பெங்களூரு 2
சென்னை - திருச்செந்தூர் 2
சென்னை திருவான்மியூர் - திருச்செந்தூர் 2
மன்னார்குடி - சென்னை 2
காரைக்குடி - சென்னை 2
ஈரோடு - சென்னை 2
மதுரை - சென்னை 2
திருநெல்வேலி - சென்னை 2
திருச்சி - சென்னை 1
மொத்தம்  23

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் மேற்படி பேருந்து சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Red Alert: கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட்! இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத் தாழ்வு மண்டலம் - உங்க மாவட்டத்தில் எப்படி?