திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே, தனியார் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, நடத்துநரின் சாமர்த்தியத்தால், பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். நடந்தது என்ன.? பார்க்கலாம்.

Continues below advertisement

ஓடும் பேருந்தில் மாரடைப்பால் சரிந்து விழுந்து இறந்த ஓட்டுநர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து, தனியார் பேருந்து ஒன்று புதுக்கோட்டைக்கு சென்றுள்ளது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டிச்சென்ற நிலையில், கணக்கம்பட்டி தாண்டி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோதே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

Continues below advertisement

சமயோஜிதமாக செயல்பட்ட நடத்துநர்

பேருந்தின் ஓட்டுநர் திடீரென சரிந்து விழுந்த உடன், அனைவரும் செய்வதறியாது தவித்த நிலையில், சட்டென சுதாரித்துக்கொண்ட பேருந்தின் நடத்துநர் விமல், விரைவாக ஓடிச் சென்று, பேருந்தில் உள்ள பிரேக்கை தனது கைகளால் அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து, பயணிகள் ஓடி வந்து ஓட்டுநர் பிரபுவை தூக்க முயற்றி செய்தனர். ஆனால், அதற்கள் அவர் உயிரிழந்துவிட்டார். ஓடும் பேருந்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இத்தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நடத்துநர் விமல் வேதனை

நடத்துனரின் சமயோஜித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இது தொடர்பாக பேசிய நடத்துநர் விமல், நெஞ்சு வலிக்கிறது என்னால் முடியவில்லை என்று சொல்லிக் கொண்டே ஓட்டுநர் பிரபு சரிந்து ஸ்டியரிங்கின் மீது விழுந்துவிட்டதாகவும், உடனே ஹேண்ட் பிரேக்கை போட்டு பேருந்தை நிறுத்தியதாகவும், அதனால் பல உயிர்களை காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஓட்டுநரைத் தான் காப்பாற்ற முடியவில்லை எனவும் விமல் வேதனை தெரிவித்துள்ளார். நடத்துநரின் துரிதமான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.