China Earthquake : சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியி உள்ள யுன்னான் என்ற மாகாணத்தில் நேற்று முன் தினம் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11.27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 5.2 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. நேற்று நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம்:
இந்த நிலநடுக்கம் சீனாவின் யுன்னான் என்ற பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு, கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சக்திவாய்ந்தது:
இதனை அடுத்து, சுமார் 1 மணி நேரம் கழித்து அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. லாங்யாங் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக யுன்னான் என்ற பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் காயம்
சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், நிலநடுக்கத்தால் நிறுத்தப்பட்ட இருந்த போக்குவரத்து சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த 2,500 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சீனாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, சமீபத்திய ஆண்டுகளில் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க