நடப்பாண்டில் நிறுவனத்தின் வருவாய் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிநுட்ப நிறுவனமான காக்னிசன் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது.
3500 ஊழியர்கள் பணிநீக்கம்:
தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட் விரைவில் 3,500 ஊழியர்களைபணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் அதன் வருவாய் குறையும் என்று காக்னிசன்ட் நிறுவனம் கூறியுள்ல்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ ரவிக்குமார், செலவுகளைக் குறைக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான திட்டத்தை வெளியிட்டார். செலவை மேலும் குறைக்க இந்நிறுவனம் 11 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தையும் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்சென்ச்சர், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளும் வகையில் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் அலுவலக இடங்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் அடங்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது. ஊழியர்கள் பணி நீக்க முடிவால் இந்தியாவை சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியர்களுக்கு பாதிப்பா?
முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய ரவிக்குமார், இந்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, பிரையன் ஹம்ப்ரீஸ், -ஐ குறிப்பிட்ட காரணமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டார்".
காக்னிசன்ட் வேகமாக முன்னேறவும், அதன் வணிக வேகத்தை அதிகரிக்கவும் மற்றும் வருவாய் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் வேண்டிய அவசியம் உள்ளதால், இதற்கு, தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம் தேவை என்று நாங்கள் நம்பினோம், ”என்று காக்னிசென்ட் வாரியத்தின் தலைவர் ஸ்டீபன் ஜே ரோஹ்லேடர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். காக்னிசென்ட் அமெரிக்காவில் உள்ளது, என்ற போதிலும் இந்தியாவில் அதன் ஏராளமான அலுவலகங்கள் செயல்படுகின்றன.
ரவிகுமார், பங்குதாரர்களுக்கு அனுப்பிய செய்தியில்,“அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியா உலகின் தொழில்நுட்ப திறமை மையமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதன் மக்கள்தொகை டிஜிட்டல் திறனை தற்போது வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாது. காக்னிசன்ட் பிராண்ட் இந்தியாவின் கல்லூரி வளாகங்களில் நன்கு அறியப்பட்டதாகும்." இந்தியாவின் வளமான தகவல் தொழில்நுட்பத் திறன்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.