கலிஃபோர்னியாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த வாரம் பெய்த பெரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. திங்களன்று வெள்ளப்பகுதி சூழ்ந்த சாலையில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வெள்ளநீர் அதிகம் சூழ்ந்திருக்கிறது. காரில், சாலையை கடந்துவிடலாம் என்று என்று பெண் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்ததைவிட நிலமை மோசமாக இருந்திருக்கிறது. வெள்ளநீரில் கார் நிலைத்தடுமாறி கவிழ்ந்துள்ளது. வெள்ளநீர் கடுமையாக இருந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பெண் நீந்தி காரின் மீது ஏறி தன்னை பாதுகாக்க முயன்றுள்ளார். காரின் மீது அமர்ந்துள்ளார். அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய ஃபோன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. பிறகு, கலிஃபோர்னியா தேசிய நெடுஞ்சாலை பாட்ரோல் அதிகாரிகள் 'Alameda தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை 15 மணி நேரத்திற்கு பிறகு மீட்டுள்ளனர்.
இது தொடர்பான Alameda தீயணைப்பு துறையினர் தெரிவிக்கையில், “மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால் எங்களால் மீட்பு பணியில் ஈடுபடுவது கடினமாக இருந்தது. மேலும், வெள்ளத்தில் சிக்கிய பெண் யாரையும் தொடர்பு கொள்ளும் சூழல் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வாசிக்க..