மத நிந்தனை என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன என்பவர் பாகிஸ்தான் நாட்டில் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  இதையொட்டி, இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சிறுபான்மையினர் கும்பல் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய சூழல் எழுந்துள்ளது. 


 






 


பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில், இலங்கை பிரஜையான  தியவதன விளையாட்டு உபகரண தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தான் பணியாற்றும் அலுவலக சுவரில் ஒட்டப்பட்டிருந்த நபிகள் நாயகம் குறித்த பாகிஸ்தானிய டெகரிக் இ தாலிபானின் போஸ்டரை அவர் கிழித்ததாக கூறப்படுகிறது.


அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும், டெகரிக் இ தாலிபானின் இயக்க ஆதரவு பணியாளர்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து  அவரை கடுமையாக தாக்கினர். கொடூர தாக்குதலில் பிரியந்த தியவதன உயிரிழந்துள்ளார்.  கொடூரத்தின் உச்சமாக இறந்தவரின் உடலை கும்பல் வன்முறையாளர் நடுரோட்டில் வைத்தே எரித்துள்ளனர்.   


இந்த கொடூரமான சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பஞ்சாப் மாநில முதல்வர், " இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் இத்தகைய சம்பவங்களை ஒடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். தவறு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது" என்றார்.


மேலும், வாசிக்க:   News Wrap | Abp headlines : இதெல்லாம்தான் இன்றைய டாப் நியூஸ்! முக்கியச் செய்திகள் சில! 


Heart Attack in Young Age: அப்போது புனித்... இப்போது ஸ்வரூப் மிஸ்ரா.. திரையுலகை மிரட்டும் இளம் வயது மரணம்.! என்ன சிக்கல்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண