ஆஸ்திரேலியா, வெள்ளையர்கள் அதிகம் வாழும் வளர்ச்சியடைந்த நாடு. கிரிக்கெட்டில் அவர்கள் கில்லி என்ற பிம்பத்தை கடந்து அதன் மீதான கறுப்பு பக்கத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
வல்லரசு என வியந்து பார்க்கப்படும் ஒவ்வொரு நாடுகளுக்கு உள்ளே இருக்கும் மோசமான பக்கம் ஆஸ்திரேலியாவுக்கும் உண்டு. அது தான் இனவெறி. அந்நாட்டு வெள்ளை இன வெறியர்கள் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் எண்ணில் அடங்காதவை. தாக்குதல்கள் எல்லை மீறி உயிரிழந்தவர்கள் ஏராளம். திருடர், கொலைகாரர் என்று பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பலரை இந்த இனவெறியர்கள் தாக்கி உள்ளனர்.
2010-ம் ஆண்டும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையின்படி, 132 இந்தியர்கள் இனவெறியர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வளவு ஏன், ஆஸ்திரேலியாவுக்கு விளையாட சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களும் இன, நிற வெறியர்களின் வசைகளில் இருந்து தப்பியதில்லை. இதனை கண்டித்து இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்ற தலிபான் தலைவர்.. தோஹாவில் இந்தியத் தூதருடன் சந்திப்பு!
ஜெர்மனியில் பல லட்சக்கணக்கான யூதர்களை கொன்ற சர்வாதிகாரி ஹிட்லரின் தத்துவங்களை பின்பற்றும் நவ நாஜிக்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வருவதே இதுபோன்ற நிறவெறித் தாக்குதல்களுக்கு காரணம் என ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது. அங்குள்ள 16 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு நவ நாஜி கொள்கைகள் போதிக்கப்படுவதாக அந்நாட்டின் தீவிரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு தலைவர் மைக் பர்கஸ் தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய மாகாணமான விக்டோரியாவில், நவ நாஜிக்களின் நிறவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு நாஜிக்களின் சின்னங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு பரிந்துரைத்து இருந்தது.
அதன்படி, விக்டோரியாவில் நாஜிகளின் ஸ்வஸ்திகா போன்ற சின்னங்களை பொதுவெளியில் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் வரலாறு சார்ந்த பணிகளை கடந்து நாஜிக்களின் ஸ்வஸ்திகா சின்னத்தை பயன்படுத்துவது குற்றம் என இச்சட்டம் கூறுகிறது. இந்த சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இருப்பதால் இந்த மசோதா நிச்சயம் சட்டமாக்கப்படும் என நம்பப்படுகிறது. இது நிறைவேற்றப்பட்டால். உலகிலேயே நாஜிக்களின் சின்னத்துக்கு தடை விதிக்கும் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறும் எனத் தெரிகிறது.
'இணைய வேகத்தை 2Mbps ஆக மாற்ற வேண்டும்!’ - மத்திய அரசுக்கு ‘ட்ராய்’ அமைப்பு பரிந்துரை!