ஆப்கானிஸ்தானில் கடுமையன நெருக்கடிச் சூழல் நீடித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அங்கிருந்த அமெரிக்க இராணுவம், தனது படைகளை திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் தாலிபன்கள் தங்களின் படைகளை வலுவாக்கி அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றினர்.    



ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அறித்திருந்தார். அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியது போலவே அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த கடைசி குழு இன்று( செப்டம்பர் 1) வெளியேற தயாராக இருந்த நிலையில், அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த உசேன் என்பவர், தனது ஆறு மகள்களோடு அமெரிக்கா செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் உள்ள தாலிபன் சோதனைச் சாவடியில் பல நாட்களாக வரிசையில் நின்று போராடி வருகிறார்.




நாம் செல்வதற்கு கண்டிப்பாக ஒரு விமானம் வரும் என்ற நம்பிக்கையுடன் நின்று இருந்தார். பல நாட்களாக அமெரிக்க தூதரகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். உங்களது மகள்கள் இல்லாமல் நீங்கள் மட்டும் செல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் உசேனிடம் போனில் தெரிவித்துள்ளார். காரணம் அவரது மகள்கள் அமெரிக்க குடிமக்கள் இல்லை, கடந்த நில நாட்களுக்கு முன்புதான் உசேனின் மனைவி கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்து உள்ளார். 


காபூல் விமான நிலையத்தில் இறுதியாக செல்லப்பட்ட யுஎஸ் சி-17 விமானத்தின் அலறல் சத்தம் மூலம், தனது இருபது ஆண்டுகால தலையீட்டை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் முடித்துக் கொண்டது. அதேசமயம் ஆப்கானிஸ்தானில் மிகவும் ஆபத்தான நிலப்பரப்பில் வாழ்பவர்களில் உசேனும் ஒருவர். 


இதுகுறித்து உசேன் கூறுகையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பதாகவும், பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சிப்பதாகவும் எனது உறவினர்கள் தெரிவித்தனர். என்னால் எங்கு வேண்டுமானலும் செல்ல முடியும். ஆனால் என்னுடைய மகள்களை தனியாக விட்டுவிட்டு எவ்வாறு செல்ல முடியும்.


கடைசியாக சென்ற குழுவேடு அமெரிக்க விமானங்களும் முடிந்துவிட்டன. பலதரப்பட்ட பிரச்சனைகள் குறித்து தாலிபான்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர். தற்போது மக்களின் நிலை குறித்து எந்த சுமூக சூழலும் அமையவில்லை. விமான நிலையங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து தாலிபான், கத்தார் மற்றும் துருக்கி இடையேயான பேச்சு வார்த்தைகள் முடிவடைய சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். 


பலர் ஏற்கனவே தப்பிக்க முடிந்த திசையெங்கும் சென்றுவிட்டனர். தற்போது நல்ல முடிவு கிடைக்குமா என்று ஏக்கத்துடன் பலர் அங்கேயே மரண அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.