க்ரூ-6 மிஷனுடன் zero gravity பகுதிக்கு பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாடி, விண்வெளியில் புனித ரமலான் மாதத்தை தொடங்கியுள்ளார்.






ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விண்வெளி வீரர் ஒருவர், விண்வெளிக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாடி ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து விண்வெளி நிலையத்திலிருந்து ரமலான் மாத வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "ரம்ஜான் முபாரக். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அழகான இரவு நேர காட்சிகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்," என்று அவர் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


ரம்ஜான்


ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் 30 நாட்கள் நோன்பு மேற்கொள்வார்கள். ரமலான் மாதத்தின் போது இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதவர்கள், நோன்பு மேற்கொள்ள முடியாதவர்கள் நோன்பு இருக்க கட்டாயம் இல்லை. நோன்பு காலத்தில் சுய கட்டுப்பாடு, பசி, தாகம், புலன்களை அடக்குதல் ஆகியவை கற்றுக்கொள்ளப்படுகிறது. “நல்ல நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பார்த்து எவர் நோன்பு இருக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான்” என்ற நபியவர்களின் கூற்றின்படி, நோன்பும், பெருநாளும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது.


விண்வெளி வீரர் சுல்தான் அல்நெயாடி இதனை குறிப்பிடும் போது விண்வெளிக்கு செல்வதால் நோன்பு கடைபிடிக்க முடியாது என கூறியிருந்தார். மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கு முன்  இந்த திட்ட பயணத்தை பாதிக்கக்கூடிய அல்லது குழு உறுப்பினர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய செயல்களை தன்னால் செய்ய முடியாது" என்று கூறியிருந்தார். அரபு எமிரேடஸை சேர்ந்த விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sundar Pichai : ஊழியர்கள் அடுத்தடுத்து பணிநீக்கம்... சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய 1,400 ஊழியர்கள்...! என்ன விஷயம் தெரியுமா?


குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் விற்ற இந்திய இளைஞர்.. 188 மாத சிறைத் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்


Khalistani Attack UK: காலிஸ்தான் விவகாரம்; 'உறுதி மட்டும் போதாது, நடவடிக்கை எடுங்கள்' - அமெரிக்கா, லண்டனுக்கு இந்தியா வலியுறுத்தல்