சைல்ட் பான் எனப்படும் குழந்தைகளை பாலியல் உறவுக்கு உட்படுத்தி எடுக்கப்படும் வீடியோக்களை விநியோகித்துவந்த குற்றத்திற்காக இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 188 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.


ஆஞ்சலோ விக்டர் ஃபெர்னாண்டஸ் என்ற அந்த நபர் இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் டேனியல் ஸ்காட் க்ரோ என்ற நபருக்கு 13 சைல்ட் பான் வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் டேனியல் ஸ்காட் க்ரோவுடன் பேசி அவர் விரும்பினால் அவர் பாலியல் உறவு கொள்ள குழந்தைகளை ஏற்பாடு செய்துதருவதாகவும் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளை எப்படி பாலியல் உறவுக்கு உட்படுத்துவது என்பது குறித்தும் டேனியலுடன் பேசியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த அமெரிக்க போலீஸார் அவரை அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் கூட தமிழகத்தில் தஞ்சாவூரில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் குழந்தைகளை பாலியல் தொலைக்கு ஆளாக்கிய விவகாரம் மற்றும் தனது கணிப்பொறி, செல்போனில் குழந்தைகள் ஆபாசப் படம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். இன்டர்போல் கொடுத்த துப்பின் பேரில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது, பார்ப்பது, பரப்புவது போன்ற குற்றங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் 67B பிரிவின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. 


சிபிஐ மூலமாக பெறப்படும் இன்டர்போல் பட்டியலில் உள்ள குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை, மத்திய  அரசு அவ்வப்போது தடை செய்து வருகிறது.இணையளத்தை பயன்படுத்தும் போது டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்படுத்தி வருகிறது.


கடந்த 2022 ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் மேக்-சக்ரா’ (Operation Megh Chakra) என்ற அந்தச் சோதனை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 56 இடங்களில் நடத்தப்பட்டது. குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள் (செக்ஸ் படங்கள்), படங்களை பகிர்வது, சிறுவர்களை மிரட்டும் தனிநபர், குழுக்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இன்டர்போல் போலீஸாரின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டவர்கள், அவற்றை பரிமாறிய நபர்கள் குறித்து பெறப்பட்ட தகவலில் அடிப்படையில் நடந்தது. 


சர்வதேச இன்டர்போலில் சிபிஐயும் ஓர் அங்கத்தினராக இருக்கிறது. சர்வதேச அளவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் படங்கள், வீடியோ பற்றிய தகவல்களைக் கொண்ட அமைப்பின் மூலம் குழந்தை பாலியல் சுரண்டல் பற்றிய தகவல்களை உறுப்பு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ள முடியும்.