இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவ்வியக்கத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங்கை கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


தூதரகத்தில் தாக்குதல்:


இந்நிலையில், அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்தவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தேசிய கொடியை கீழிறக்கியும், தாக்குதலும் நடத்தினர். அதேபோன்று அமெரிக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர்.


தூதரங்கள் மீதான தாக்குதல் தொடர்பான சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த தாக்குதலுக்கு லண்டன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களும் கண்டனம் தெரிவித்திருந்தன.


காலிஸ்தான் விவகாரம்:


இந்திய அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், இந்திய தூதரகத்தில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த வார தொடக்கத்தில், இந்தியா பிரிட்டிஷ் துணை தூதரை அழைத்து, "பாதுகாப்பு இல்லாதது" குறித்து விளக்கம் கோரியது. அமெரிக்கா உள்ள  மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்களின் நாசவேலை சம்பவங்களை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்களுடன் இந்தியா வலுவாக எடுத்துச் சென்றுள்ளது.


வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில், நாசவேலை சம்பவங்களை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்களுடன் இந்தியா வலுவாக எடுத்துக் கொண்டுள்ளது என்றார்.


”நடவடிக்கை எடுக்க வேண்டும்”


இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாக்ச்சி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது,






"லண்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில், தாக்குதல் நடந்த விவகாரத்தை வலுவாக எடுத்துக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு வழக்குத் தொடரவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை, அமெரிக்க-லண்டன் அரசாங்கங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், 


மேலும், எங்கள் தூதரகங்களுக்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் வெறுமனே உத்தரவாதங்கள் அளிப்பதை  எதிர்பார்க்கவில்லை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம் என்று பாக்ச்சி தெரிவித்தார்.


Also Read: Rahul Gandhi Disqualified: என்ன காரணங்களுக்காக எம்.பி. தகுதிநீக்கம் செய்யப்படுவார்? சட்டம் சொல்வது என்ன? - ஓர் அலசல்