டெக் ஜாம்பவானான மெட்டா ட்விட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 


த்ரெட்ஸ் (Threads) என்பது பயனர்கள் எழுத்து (texts) மூலம் கருத்தைப் பகிரும் சமூக வலைதளம். இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம். இது ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக ஏன் அச்சுறுத்தலாகக் கூட இருக்கும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் கருதுகின்றனர். இதனை இன்ஸ்டாகிராம் கணக்கின் வாயிலாக ஒருவர் தொடங்க முடியும். த்ரெட்ஸில் டெக்ஸ்ட்களே பிரதானம் என்றாலும் இதில் புகைப்படங்கள், ஷார்ட்ஸ், உயர் தர வீடியோக்களையும் பகிர முடியும்.


இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள், த்ரெட்ஸ் செயலியை திறந்து அதில் இன்ஸ்டாவில் உள்நுழையக் கூடிய தகவல்களை கொடுத்தாலே போதும். இந்த செயலியைப் பயன்படுத்தலாம். இதற்கான தனி கணக்கு தேவைப்படாது. ட்விட்டர் வழங்கக்கூடிய சேவைகளும், அதில் இருந்து சில அம்சங்கள் கூடுதலாகவும் த்ரெட்ஸ் தளத்தில் இருக்கும் என மெட்டா உறுதி அளித்துள்ளது.


எலான் மஸ்கின் ட்விட்டர் சமூக வலைதளம் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக பொலிவிழந்து வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம் கணக்கின் வழியாக பயனர்கள் தொடங்கி பயன்படுத்த ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 500 எழுத்துகள் வரை நீளமாக இருக்கலாம் மற்றும் 5 நிமிட நீளம் கொண்ட இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை அடங்கும். ஒருவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் த்ரெட்ஸ் இடுகையைப் பகிரலாம். இந்த த்ரெட்ஸ் செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வெறும் 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.


த்ரெட்ஸ் கணக்கு துவங்குவது எப்படி


இந்த செயலி ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் இலவசமாக கிடைக்கிறது. ஏற்கனவே நிறைய செயலிகள் த்ரெட்ஸ் செயலி பெயரில் இருப்பதால் தமிழ் வார்த்தை கு-வை லோகோவாக கொண்ட த்ரெட்ஸ் செயலியை டவுன்லோட் செய்து, அதன் கீழே பவர்ட் பை இன்ஸ்டாகிராம் என்று இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும். உள்ளே சென்றவுடன் ஏற்கனவே உங்கள் போனில் இன்ஸ்டாகிராம் இருந்து அதில் கணக்கும் இருந்தால் அந்த கணக்கின் பெயர் இந்த த்ரெட்ஸ் செயலியில் காட்டப்படும். அதை கனெக்ட் செய்து கணக்கை எளிதாக துவங்க முடியும்.

மேலும் படிக்க 


Chandrayaan 3 Launch: சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் தேதியில் மாற்றம்..இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Jailer First Single: கிறங்க வைக்கும் குரல்.. மயங்க வைக்கும் தமன்னா .. வெளியானது ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல்..!