நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

Continues below advertisement

பெரும் எதிர்பார்ப்பில் ஜெயிலர் படம்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன்  என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம்   படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று அறிமுகம் செய்யப்பட்டது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்த வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முடிவடைந்தது. 

Continues below advertisement

 ‘காவாலா’ பாடல் ரிலீஸ்

இதனிடையே ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே ரிலீசுக்கு உள்ள நிலையில், படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக “காவாலா” இன்று (ஜூலை 6) மாலை வெளியாகும் என சில தினங்களுக்கு முன் ப்ரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது. 

வழக்கம்போல நெல்சன் தனது ஜாலியான ஸ்டைல் வீடியோ மூலம் பாடல் வெளியாவதை அறிவித்தார். அந்த வீடியோவில் அனிருத்திடம் அவர் ஃபர்ஸ்ட் சிங்கிளை கேட்டு போராடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.இதனைத் தொடர்ந்து தமன்னா புகைப்படத்துடன் போஸ்டர் வெளியானது. காவாலா என தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனமைத்துள்ளார். 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ‘காவாலா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு ட்விட்டரில் #Kaavaalaa என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.