உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இயல்புக்கு மாறாக அதிக அளவிலான மழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது.
இதையும் படிக்க: ஆபீஸ் பாய்; மேனேஜர்; அசிஸ்டண்ட் டைரக்டர்.... - இயக்குநர் சேரன் சினிமாவுக்கு வந்த கதை...!
இதற்கு ஏற்றார் போல் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகளை மா்ற்ற வேண்டிய தேவை உள்ளது.
நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களும் அதற்கான தேவையை அதிகரிக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான மேகலயாவின் தெற்கு கரோ மலைப்பகுதி மற்றும் மேற்கு கரோ மாவட்டத்தில் உள்ள ஜிஜிகா, மெகுவா ஆகிய பகுதிகளை இணைக்கும் மரத்திலாலான பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் வியாழக்கிழமை நிகழ்ந்தது.
இதையும் படிக்க: ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!
இந்த வீடியோ உண்மையானது என காவல்துறையினரும் உறுதிபடுத்தியுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததற்கு இயல்புக்கு மாறான மழை காரணமா? அல்லது தரமற்ற பாலம் காரணமா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இதற்கு தரமற்ற பாலம் காரணமாக இருக்கும் பட்சத்தில் அதை சரி செய்வது மட்டும் இன்றி, பாலங்களில் வழக்கமாக ஆய்வு மேற்கொள்வதும் அவசியமாகிறது.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்