சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூபாய் 38 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது.


சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 795க்கு நேற்று விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 360க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 775க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் ரூபாய் 160 குறைந்து 38 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் ரூபாய் 5 ஆயிரத்து 174க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 392க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 67க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 67 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.




இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.


சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.




அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது. 




இதையும் படிங்க: Two Thousand Rupee : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா ரிசர்வ் வங்கி? என்ன காரணம்? அறிக்கை சொல்வது என்ன?



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண