புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழூநீரம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.


புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டு தேர்விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  தொடர்ந்து தினமும் அம்மனுக்கு  அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பல்வேறு ஆலங்காரத்தில் அம்மன் வீதிஉலாவானது நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.






 


இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்,  கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.  தேரோட்டத்தில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழக பகுதிகளிலும் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை தொடர்ந்து நாளைய தினம் தெப்பல் உற்சவமும், 25ம் தேதி முத்துபல்லக்கு ஊர்வலமும் நடைபெற உள்ளது.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.