விழுப்புரம்: தமிழக அரசும் மற்றும் முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அரசு வழக்கறிஞர் சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இரு வேறு வழக்கில் வருகின்ற 9 ஆம் தேதி சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைடுத்த நாட்டார் மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் எம்.பி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார்.


இவ்வழக்கை  விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி. சண்முகம் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஆரோவில் பகுதியில் கடந்த 10.3.23 ஆம் தேதியன்று அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தமிழக முதல்வர் ஸ்டாலினை இழிவாகவும் , தமிழக அரசையும் தரக்குரைவாக பேசியதாக அரசு வழக்கறிஞர் டி எஸ் சுப்பிரமணியம் என்பவர் தொடர்ந்தார்.


இவ்வழக்கு விசாரனை இன்று மாவட்ட குற்றப்பிரிவு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இவ்வழக்கிமை விசாரித்த நீதிபதி புஷ்பராணி குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி  நீதிபதி உத்தரவிட்டார். மாநிலங்களவை உறுப்பினர் இரு வேறு வழக்குகளில் விழுப்புரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.




 



மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்


மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?


Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!


வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை; போலீசாரிடம் சிக்கிய சுவாரசிய சம்பவம் - எப்படி தெரியுமா..?