புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த  பட்டதாரி இளைஞர் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக பணம் தருகிறோம் என்பதை நம்பி 12 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார்.


புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பி.டெக் பட்டதாரி சிவஞானம். இவர், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இணைய வழியில் ஏதாவது சம்பாதிக்க வழி இருக்கிறதா என்று தேடியுள்ளார். அப்போது டெலிகிராம் அக்கவுண்டில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருகிறோம் என்று ஒரு சில வீடியோக்களை பார்த்துள்ளார். அதில், அறிவு கொடுத்தால் உங்களுக்கு பணம் அனுப்புகிறோம் என்று 2000 ரூபாய் பணத்தை அனுப்பி,  இதற்கு நீங்கள் நேரடியாக முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிள்ளார். இந்த நிலையில், நேற்று எந்த தொடர்பும் டெலிகிராம் லிங்கில் இருந்து வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து  தான் ஏமாந்ததை உணர்ந்த அவர், இன்று இணைய வழி காவல் நிலையம் வந்து புகார் அளித்தார்.


அது சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி மற்றும் காவலர் முருகன்  மேற்கண்ட வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்து வருகிறார்கள். இணைய வழியில் எந்த ஒரு முதலீடோ மற்றும் வேலை வாய்ப்பு அழைப்புகளையோ ஏற்க வேண்டாம் என மீண்டும் மீண்டும் இணைய வழி காவல் துறை பொதுமக்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கை செய்கிறது.



ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் செயலிகள்


புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு


பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால், இதுபோன்ற உடனடி மொபைல் ஆப்பிள் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.



புதுச்சேரி சைபர்கிரைம் காவல் நிலையம்


பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பில் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!