விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் கூட்ரோடு பகுதியில் கோட்டகுப்பம்  துணை கண்காணிப்பாளர் சுனில் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு வழியாக வழியாக திண்டிவனம் நோக்கி ஆலத்தூர் கூட்ரோடு பகுதியில் ஒரு மினி சரக்கு வேன்  வந்து கொண்டிருந்தது. சந்தேகத்தின் பெயரில் போலீசார் அந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அந்த வேனில் உள்ளே 39 சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து அந்த வேனை மடக்கி தனிப்படை போலீசார் மரக்காணம் காவல் நிலையம் அழைத்து வந்தனர் மரக்காணம் காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த மினி வேனின் ஓட்டுனர் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி வயது 41 என்றும் அவரோடு உதவியாளராக வந்த அதே பகுதியை சேர்ந்த பழனி வயது 40 எனவும் தெரியவந்தது இவர்கள் இதே போல் தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மரக்காணம், திண்டிவனம், வானூர், மயிலம், செஞ்சி புதுவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வது தெரிய வந்துள்ளது இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீசார் இவர்கள் கடத்தி வந்த ரூ 10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர் மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




விழுப்புரம் செய்திகள் :- 


குறைந்த முதலீட்டில் அதிக லாபம்... டாஸ்க்கை முடிக்க சொல்லி ரூ.1 லட்சம் மோசடி - பெண்ணை ஏமாற்றிய மோசடி நபர்


விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்; தண்டவாளத்தில் மயங்கி விழுந்த நிர்வாகி


‘5 நிமிஷம் கொடுங்க சார்’......ஆர்பாட்டம் நடத்த போலீசாரிடம் கெஞ்சிய பாஜக மாவட்ட தலைவர்




புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.