விழுப்புரம் : சனாதனத்தில் உதயநிதி ஸ்டாலின் குறையாக சொல்வது குலத்தொழில். திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்ற  வழியிலே குலத்தொழிலாக நடத்தி பதவிக்கு வந்த உதயநிதி சனாதனம் பற்றி பேச அவருக்கு அருகதையும் தகுதியும் இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்ட  அதிமுக அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் சனாதன தர்மத்தை எதிர்க்கிறோம்  என்ற பெயரிலேயே இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்படி இந்த பதவிக்கு வந்தார்? சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற ஒன்று குலத்தொழில். இன்று திமுகவை குலத் தொழிலாக கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் மகன் என்ற  வழியிலே குலத்தொழிலாக நடத்தி பதவிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இதைப் பற்றி பேச எந்த அருகதையும் தகுதியும் கிடையாது என்றும் திமுகவே ஒரு டெங்கு தான் திமுக ஒழிந்தால் தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார். 


சனாதன விவகாரம்:


சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. 


இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டெல்லி, பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


"சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்"


சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், தான் தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்காமல், அதே கருத்தில் உறுதியுடன் இருக்கிறார் உதயநிதி.


இந்த நிலையில், தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, "சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார் சொன்னதைத் தான் நானும் சொன்னேன். அமித் ஷா முதல் நட்டா வரை நான் பேசியதை திரித்து பொய் செய்தியாக பரப்புகிறார்கள். சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்" என்றார்.






 



மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்


மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?


Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!


வீடு வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை; போலீசாரிடம் சிக்கிய சுவாரசிய சம்பவம் - எப்படி தெரியுமா..?