விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்  தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் விழுப்புரம் மாவட்டத்தில் 377 மாற்றுதிறனாளிகளுக்கு அரசானை 541-ன் படி இலவச மனை பட்டா இலவச வீடு வழங்க கோரி தமிழக  முதலமைச்சரிடம் மனு அளித்தும், அந்த மனுவிற்கு விழுப்புரம் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் செயல்பட்டு வருவதை கண்டித்தும், சாலையோரங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு அரசானை 33- ன் படி கடை வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும், ஆவின் கடை வைக்க 20 மாற்றுதிறனாளிகளுக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் வருவாய் துறை அதிகாரிகள் தங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ள அதிகாரிகளின் பெயர் பட்டியலை தமிழக முதலமைச்சரிடம் மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.