விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் குப்பத்து மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன் (86), விவசாயி. இவர் இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, செல்வநாதனை கத்தி முனையில் கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்தால் விபத்து - ஆட்டோ டிரைவர் இறந்ததால் பேருந்துக்கு தீ வைப்பு




மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


இந்த நிலையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் ஆகியோர் உத்தரவின்படியும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளை நடத்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, கொள்ளையர்கள் 4 பேரை தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளையர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவுக்கான இணைப்பை மட்டும் துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.


சமாதானம் செய்ய வந்தவர் மீது தாக்குதல்... கடுப்பாகி நாட்டு குண்டு வீசினார்!




Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


ஹார்டுடிஸ்கை எடுத்துச் செல்லவில்லை. இதனால் அந்த ஹார்டுடிஸ்கில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி இருக்கிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் 20 முதல் 25 வயதுடையவர்கள். கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரது கையில் சின்னா என பச்சை குத்தப்பட்டுள்ளது. ஆகவே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை புகைப்படமாக மாற்றி கிராமம் தோறும் கொடுத்து கொள்ளையர்கள் பற்றி விசாரித்து வருகிறோம். மேலும் இந்த கொள்ளை கும்பல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும். கூடிய விரைவில் இந்த கொள்ளை கும்பல் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.


மேலும் படிக்க...


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண