விழுப்புரத்தில் கொடுமை.! காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர்!!

காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர் மற்றும் உறவினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு

Continues below advertisement

காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு மொட்டையடித்த பெற்றோர் மற்றும் உறவினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பூக்கடையில் வேலை பார்த்து வரும் யுவராஜ் என்பவர், அதே பகுதியில் வசித்து வந்த பானுமதி என்ற பெண்ணை ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்த நிலையில் பானுமதிக்கு திருமண ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடைபெற்று வந்துள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய யுவராஜ், பானு இருவீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டனர்.

Continues below advertisement

இந்த நிலையில் செஞ்சி காவல் நிலையத்தில் யுவராஜ் புகார் ஒன்று அளித்துள்ளார்., டிசம்பர் 9ஆம் தேதி, என் மனைவி பானுமதியை அவரது பெற்றோர் மிரட்டிக் கடத்திக்கொண்டு போய்விட்டனர். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதனால் அவரை விரைவில் மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். யுவராஜ் அளித்த புகாரின் பேரில் செஞ்சி காவல் நிலையத்தின் விசாரணை அதிகாரியான சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் பானுமதியை தேடிவந்தார். புதுச்சேரி மாநிலம் காலப்பட்டு பகுதியில் பானுமதி அவரது தாய்மாமா அண்ணாமலை வீட்டில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அங்கு சென்று பானுமதியையும்,அவரது தாய்மாமாவையும் செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


பானுமதிக்கு திருமணம் நடந்த அன்றே அவரது தந்தை சாமிநாதன், தாய்மாமா அண்ணாமலை மற்றும் உறவினர்கள் பானுமதியைத் தேடி கண்டுபிடித்து, தென்பாலை முனீஸ்வரர் கோயிலுக்கு அழைத்து சென்று கழுத்திலிருந்த தாலியை கழட்டி போட்டுவிட்டு, அவருக்கு மொட்டை அடித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பானுமதி தந்தை சாமிநாதன், மாமன் அண்ணாமலை உட்பட ஐந்துபேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பானுமதியைப் பெற்றோருடன் அனுப்பி வைப்பதா அல்லது காதல் கணவருடன் அனுப்பி வைப்பதா என்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தெரிவித்தசெஞ்சி போலீசார்:  இந்த சம்பவத்தில் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.எனவே பொருளாதார பிரச்னைதான் காரணமாக தெரிகிறது என்றனர்.

 

மேலும் படிக்க...

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

 

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

 

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola