புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் ஆயுத பூஜை விடுமுறையை பயன்படுத்தி டீக்கடைகளை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சேத்தூர் மார்க்கெட் வீதியில், அன்பழகன், பாலாஜி

   ஆகியோர் தனித்தனியே டீக்கடை நடத்தி வருகின்றனர். ஆயுத பூஜை என்பதால் கடைகளை இருவரும் சுத்தம் செய்து பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) அதிகாலை அன்பழகன் கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்புறம் உடைக்கப்பட்டு மேஜை டிராயரில் இருந்த 18 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. அதே போல் பாலாஜி கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 9 கிராம் தங்க நகை, 65 கிராம் வெள்ளி ஆகியவை திருடப்பட்டிருந்தது.


திமுகவின் வாயாக இருந்து பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிடில் பாடம் புகட்டுவோம் - புதுச்சேரி அதிமுக


போஸ்ட் ஆபிஸில் அதிக வட்டியுடன் மெச்சூரிட்டி தொகையைப் பெற வேண்டுமா?


இது குறித்த புகாரின் பேரில் திருநள்ளாறு ஆய்வாளர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டிய கடைகளில் கைவரிசை காட்டிய அடையாளம் தெரியாத நபரை வந்தனர். நேற்று இரவு சேத்தூரை அடுத்த தென்னங்குடி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று முறைப்படி தீவிரமாக விசாரித்தனர்.


சாலை அருகே 60 அடி கிணறு... பள்ளத்தில் பார்க் பண்ண டிரைவர்...நொடிப் பொழுதில் தப்பிய பயணிகள்!




சென்னை அணியை நேரில் உற்சாகப்படுத்திய முதல்வர் குடும்பத்தினர்... வைரலாகும் போட்டோக்கள்!


விசாரணையில்,  அவர் தூத்துக்குடி   மாவட்டம்,  திருச்செந்தூர் உடன்குடி, பூக்கார தெருவைச் சேர்ந்த தங்க முத்து (72) என்பதும்,  சேத்தூர் டீக்கடைகளில் புகுந்து திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


கைதான தங்க முத்து மீது  தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களில்  ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். புதுச்சேரியில் தொடர் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அச்சத்தில் உள்ளனர். பூட்டிய கடைகளில் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்