கோபிச்செட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் பேருந்து ஒன்று பெரும் விபத்திலிருந்து காப்பாற்ற பட்டு, உள்ளே இருந்த பயணிகளும் எந்த காயமுமின்றி மீட்கப்பட்டனர். திறமையாக ஒட்டி அனைவரையும் காப்பாற்றியது மட்டுமின்றி பேருந்தும் சேதமகாமல் தவிர்த்த ஓட்டுனரை பயணிகள் கூடி நின்று பாராட்டினர். பிறகு வேறு பேருந்தில் சென்று சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தனர்.



கோபியில்  இருந்து அளுக்குளி, குருமந்தூர், நடுப்பாளையம், மூனாம்பள்ளி வழியாக  நம்பியூர் நோக்கி நேற்று 2 ஆம் நம்பர் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 25 க்கும் மேற்பட்ட  பயணிகள் பேருந்தில் அந்த நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்தை நம்பியூரை சேர்ந்த சம்பத்குமார் என்னும் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். வேலுச்சாமி என்பவர் நடத்துனராக இருந்துள்ளார். பேருந்து  குருமந்தூர் அடுத்துள்ள நடுப்பாளையம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே மற்றொரு அரசு பேருந்து வந்தது. குறுகிய சாலை என்பதால், அந்த பேருந்துக்கு வழிவிட சம்பத்குமார் பேருந்தை திருப்பி சாலையின் ஓரமாக ஒட்டிச்சென்றார். அப்போது அந்த தடத்தில் 60 அடி ஆழ கிணறு இருந்துள்ளது.  அதனை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுனர் அருகில் உள்ள பள்ளத்தில் பேருந்தை நிறுத்தினார். பேருந்தை உடனடியாக ஓட்டுநர் நிறுத்தியதால் பெரும் சேதமும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது. திறமையாக பேருந்தை இயக்கி பலரது உயிரை காத்த ஓட்டுனரை பல பயணிகள் பாராட்டினர். அதைத்தொடர்ந்து பயணிகளை வேறு ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்து மீட்கப்பட்டு பணிமனைக்கு அனுப்பப்பட்டது. கண்டக்டர் வேலுச்சாமியும், ஓட்டுநர் சம்பத் குமாரும் கடைசி வரை இருந்து பேருந்தை எடுத்து கொண்டு பணிமனையில் சேர்த்தனர்.



தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா ஊர்களிலும் அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துக்கள் ஆகின்றன. அதுமட்டுமின்றி விபத்துக்குள்ளாவதற்கான காரணங்கள் பெரும்பாலும் காலாவதியான பேருந்துகளை இன்னமும் இயக்கிக்கொண்டிருப்பதால் தான் என்று அறிக்கைகள் கூறுகின்றன. அதற்கு அடித்தபடியாக பராமரிப்பில்லாத சாலைகளை கூறுகின்றனர். பேருந்துகளில் மக்கள் அதிகம் இருப்பதால், பொதுவாக பேருந்து விபத்துக்குள்ளானால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. அதனாலேயே தமிழக அரசு பெருந்துகளுக்கு அதிகம் செலவு செய்து புதிய பேருந்துகள் பல வாங்கி ஓடவிட்டு வருகின்றனர். சாலைகள் புதிய காண்டராக்டர்களை கொண்டு சீராக பராமரித்து வருகின்றனர். ஆனாலும் சில உள் கிராமங்களில் இது போன்ற சாலைகள் பராமரிக்க முடியாத நிலையில் தான் உள்ளது. இப்படி மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செல்லும் இந்த போக்குவரத்து துறையின் பழைய பேருந்துகள் சம்பத் குமார் போன்ற திறமையான ஓட்டுநர்கள் இருப்பதால் பல விபத்துக்கள் தவிற்கப்படுகின்றன.