துபாயில் நேற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியை நேரில் கண்டுரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.




 
துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 




 


இந்த நிலையில், இறுதிப்போட்டியை உதயநிதி ஸ்டாலின், இன்ப நிதி, சபரீசன் உள்ளிட்டோர் நேரில் கண்டு ரசித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும், ஒரு வீடியோவில் சபரீசன் உற்சாகமாக துள்ளி குதிப்பதை காணலாம். அத்துடன், முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரை கண்டுரசித்த முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.


 






போட்டிக்கு பின் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “தோல்வியில் இருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள தோனி தலைமையிலான சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், அணி நிர்வாகம் மற்றும் சென்னை அணியின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில்," சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.