நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த டி. ஜெகநாதன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னை கவுன்சிலராக சித்தகரித்து பொது இடத்தில் ப்ளக்ஸ் போர்டு வைத்த ஆர். ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அன்று, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் மற்றும் நகராட்சி ஆணையர் திண்டிவனம் நகராட்சி குடிநீர் தொட்டியை, முருகம்பாக்கம் அருகே உள்ள பெரியாண்டவர் கோவில் தெருவில் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆளுங்கட்சி உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸை திறந்து வைத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
அதில் ரவிச்சந்திரன் அந்த பகுதியின் கவுன்சிலராக அந்த ப்ளக்ஸில் பொறிக்கப்பட்டிருந்தது என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். 2016ம் ஆண்டில் இருந்து இந்த பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் என்று யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பல கோடி மதிப்புள்ள உலோக சிலைகள் கடத்தல்... பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது
ஆனாலும், ரவிச்சந்திரன் உண்மைக்கு புறம்பான கருத்துகளை அந்த ப்ளக்ஸில் வைத்திருக்கிறார் என்று தெரிந்தும் அமைச்சரும் நகராட்சி ஆணையரும் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். அது மட்டுமின்றி குடிநீர் தொட்டி அமைக்க நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் அதில் “திண்டிவனம் நகராட்சி குடிநீர் தொட்டி” என்று பொறிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஜெகநாதன்.
இந்த மனு தொடர்பான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்த நிலையில், அமைச்சர் மஸ்தானுக்கும், திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்