மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதன் மூலம் அவருக்கு ரசிகர் வட்டம் பெருக தொடங்கியது. தொடர்ந்து, தற்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும், மாளவிகா மோகனன் அண்மையில் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப்புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரபல ஊடகம் ஒன்றை கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப்பதிவில், “ சில மாதங்களுக்கு முன்னர், இந்தப் புகைப்படத்தை யாரோ ஒருவர் போட்டோஷாப் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதிக அளவு ஷேர் செய்யப்பட்ட இந்தப் புகைப்படத்தை பிரபல ஊடகமும் வெளியிட்டுள்ளது. இது மிகவும் மலிவான பத்திரிக்கை தர்மம். நீங்கள் போலியான புகைப்படத்தை பார்த்தால், புகார் அளிக்க உதவி செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.