உள்ளாட்சி தேர்தல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் இருந்த கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டு வருகிறது. அதே போல் ஆளும்கட்சியான திமுக, ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டு, மறுபுறம் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. அதன் படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதுவரை 5 கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று 6வது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி. செஞ்சி பேரூராட்சி, அனந்தபுரம் பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி, கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாச்சலம் நகராட்சி, நெல்லிக்குப்பம் நகராட்சி, பண்ருட்டி நகராட்சி, தொரப்பாடி பேரூராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி, தஞ்சை மத்திய மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாடு பேரூராட்சி , வல்லம் பேரூராட்சி , திருவையாறு பேரூராட்சி , மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி, திருக்காட்டு பள்ளி பேரூராட்சி , புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்தை அறந்தாங்கி நகராட்சி, பொன்னமராவதி பேரூராட்சி, அரிமளம் பேரூராட்சி , கீரமங்கலம் பேரூராட்சி , ஆலங்குடி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியாகியுள்ளது.
திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 6வது வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதோ அந்த விபரம்:
எஞ்சியுள்ள பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் வெளியிடப்படும் என திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சில இடங்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே, பல வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். சுபநாட்களை கருத்தில் கொண்டு அவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் வார்டுகளால் சில கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவும் முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் கூட்டணி விருப்பத்தை ஏற்க மறுத்து, வேட்பாளர்களை கட்சியே முன்னிறுத்துகிறது. இதுவரை கூட்டணிகளுக்கு எத்தனை மாநகராட்சி தலைவர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் என்கிற விபரத்தை திமுக தரப்பில் வெளியிடவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்