விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


மேலும், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான நிகழ்வை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.  தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், அவர்களுடன் திறந்த வாகனத்தில் சென்று பார்வையிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தியதுடன், சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.


பின்னர், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.40,000/- மதிப்பில் மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் திருமண நிதியுதவியும், தாட்கோ சார்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.13,18,889/- மதிப்பில் வாகனங்களையும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியின்கீழ், 8 பயனாளிகளுக்கு ரூ.9,00,000/- மதிப்பில் நிவாரண நிதியுதவியும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 1 பயனாளிக்கு ரூ.10,000/- மதிப்பில் திருமண நிதியுதவியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1 பயனாளிக்கு ரூ.1,05,500/- மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு பணி நியமண ஆணையினையும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 1 பயனாளிக்கு ரூ.26,029/- மதிப்பில் நிதியுதவியும், வேளாண்மைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.8,792/- மதிப்பில் விசைத்தெளிப்பான் இயந்திரமும், தோட்டக்கலைத்துறை சார்பில், 1 பயானாளிக்கு ரூ.73,026/- மதிப்பில் சொட்டுநீர் பாசன கருவிகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 1 பயனாளிக்கு ரூ.55,000/- மதிப்பில் இயற்கை மரண நிதியுதவி என மொத்தம் 20 பயானிகளுக்கு ரூ.25,37,246/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அளவிலான 218 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, விழுப்புரம் நகரில், சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, அண்ணல் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.