விழுப்புரம் மாவட்டம் செஞ்சி் அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமாமணி. இவர் கடந்த மாதம் 20ஆம் தேதி இரவு தனது வயலுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரமாமணி கிடைக்கவில்லை. இது குறித்து ரமாமணி மனைவி சரசு கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமாமணியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் துத்திப்பட்டு ஏரி அருகில் உள்ள மலை குன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி விவசாயிகள், மலை குன்றில் ஏறி பார்த்தனர். அங்கு ரமாமணியின் உடல் பாதி அழுகிய நிலையிலும், பாதி உடல் எலும்பு கூடாகவும் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், ரமாமணியின் குடும்பத்தினருக்கும், அனந்தபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ரமாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ஷ்டம் தரும் வைரக்கல் தருவதாக கூறி 5 லட்சம் அபேஸ் - காவலர் உட்பட 3 பேர் கைது
17 வயது மகளுக்கு தந்தை, அண்ணன்களால் பாலியல் வன்கொடுமை.. உடந்தையாக தாய்.. சென்னையில் கொடூரம்..
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியா பரபரப்பு தகவலில், துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுந்தரமூர்த்தி (55), பெருமாள் (65). இவர்களது விளைநிலம் ஏரி அருகில் உள்ளது. இவர்கள் சாகுபடி செய்திருந்த பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்வதால், அதனை கட்டுப்படுத்த மின்வேலி அமைத்துள்ளனர். இந்த மின் வேலியில் சிக்கிதான் ரமாமணி உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 2 பேரும் சேர்ந்து, ரமாமணியின் உடலை தூக்கி கொண்டு மலை குன்றில் வீசினர். பின்னர் எதுவும் தெரியாதது போல் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரமூர்த்தி, பெருமாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்