உசிலம்பட்டியில் திரைப்பட பாணியில் அதிஷ்ட வைரக்கல் வாங்கி தருவதாக 5 லட்சம் மோசடி - இந்த மோசடி தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் உள்பட மூன்று பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளிப்பட்டிணத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவர். தங்களிடம் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட அதிஷ்ட வைரக்கல் உள்ளதாகவும் அதன் மதிப்பு 5 லட்சம் என ஆசை வார்த்தைகளை கூறியதால் நம்பிய சண்முகம் என்பவர்., 5 லட்சம் பணத்துடன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வந்தார்.
உசிலம்பட்டியில் சங்கிலிப்பாண்டியின் நண்பர்களான உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்த புதுராஜா, நக்கலப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் என்ற இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது சீருடையில் வந்த இரு காவலர்கள், சண்முகத்திடம் இருந்து 5 லட்ச ரூபாயை பறித்து சென்றதோடு தன்னை அழைத்து வந்த சங்கிலி பாண்டி, புதுராஜா, சார்லஸ் என்ற மூவரையும் அழைத்து சென்றவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்த போது தன்னை மோசடியாக பணத்தை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் குணபாலன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மோசடி செய்து 5 லட்ச ரூபாயை அபகரித்து சென்ற புதுராஜா, சார்லஸ் மற்றும் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய காவலர் சிவனாண்டி உள்ளிட்ட மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சங்கிலி பாண்டியை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் காவலர் சிவணாண்டி உடன் துணைக்கு சென்றதாக மற்றுமொரு காவலர் சரவணன் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - BSF வீரரை கண்டுபிடித்து தரக்கோரிய ஆட்கொணர்வு மனு - கமாண்டண்ட் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை