சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஷெரிப் (64). இவர் செங்குன்றம் பகுதியில் மோட்டார் வாகன பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜமீலா (58). இந்த தம்பதிக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில்  திருவல்லிக்கேணியில்  17 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பெற்றோரை இழந்து தவித்து வந்த ஒரு மாத பெண் குழந்தையை ஷெரீப் குடும்பம் தத்தெடுத்தது வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது




இந்தநிலையில் 17 வயது சிறுமிக்கு ஷெரீப் மற்றும் அவரது மூன்று மகன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுபற்றி தெரிந்தும் ஷெரிபின் மனைவி ஜமீலா சிறுமியை மிரட்டி உள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொந்தரவு அதிகமாகவே 17 வயது சிறுமி, அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஒருவர் மூலமாக ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  


புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில்,  சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்த ஷெரீப், அவரது மகன்களான இம்தியாஸ், இர்பான் , ஹனீப் ஆகிய 4 பேர் சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, ஷெரீப், அவரது மகன்களான இம்தியாஸ், இர்பான், ஹனீப்  சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது தெரிந்தும் , அதை கண்டிக்காமல் இருந்த ஷெரீப்பின் 2-வது மனைவி ஜமீலா ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து 4 பேரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மற்றவர்கள் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள ஹனீப்பை போலீசார் தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வருகின்றனர்.


 


இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தத்தெடுத்த பெண் குழந்தையை தவளர்த்து வந்தார். பருவ வயதை எட்டிய அந்த மாணவி கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். பருவ வயதை அடைந்த சிறுமிக்கு, வளர்ப்பு தந்தை ஷெரீப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வளர்ப்பு தாய் ஜமீலாவிடம் கூறி அழுதுள்ளார் 17 வயது சிறுமி. அதற்கு அவர், தனது கணவர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.




வளர்ப்பு தாயின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாணவி. ஒரு கட்டத்தில் ஷெரீப்பை தவிர அண்ணன்களான இம்தியாஸ், இர்பான், ஹனீப் ஆகியோர் தனது தந்தையை போன்று ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சிறுமியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளாக தொடர் பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை  மாத்திரைகள் மூலம் கலைத்துள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். 


சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில், வீட்டு வேலை செய்த பிறகு 4 பேரும் தொடர் பாலியல்  வன்கொடுமை தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி நடந்த சம்பவம் குறித்து தன்னிடம் பேசி வரும் உயிரிழந்த பெற்றோரின் உறவுக்கார பெண் ஒருவரிடம் கூறி அழுதுள்ளார். அப்போது தான் சிறுமிக்கு 2 ஆண்டுகளாக நேர்ந்த கொடுமை குறித்து வெளியே வந்தது. இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் மாணவியை காலையில் ஒருவர், மதியம் ஒருவர், இரவு ஒருவர் என ஒரு நாளைக்கு 3 முறை பாலியல் வன்கொடுமை தொந்தரவு கொடுத்து சித்ரவதை செய்துள்ளனர்.