விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன் என்பவரின் மகன் அறிவு என்கிற அறிவழகன் (36). பிரபல ரவுடியான இவர் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 2 நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்குகள், 9 வழிப்பறி கொள்ளை வழக்குகள், 3 தகராறு வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளது. இவற்றில் 13 வழக்குகளில் கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து விழுப்புரம் நீதிமன்றத்தில்ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
Thirumavalavan Latest Speech | “நீதித்துறையிலும் மோடிகள், அமித்ஷாக்கள்”...திருமா பேச்சு | Judiciary
Supriya Sule Latest | ‘இதுதான் அரசியல்’... பாய்ண்ட்டுகளை அடுக்கிய சுப்ரியா சூலே | Parliament Speech
இதையடுத்து ரவுடி அறிவழகனை விழுப்புரம் போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்த நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதியன்று கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளியான சபாபதி (35) என்பவரை அறிவழகன் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது அவ்வழியாக ரோந்து வந்த கண்டமங்கலம் போலீசார், அறிவழகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
Jaya Kumar on Dravidian Model | “திராவிட மாடல் சிறப்பானதுதான்... ஆனால்..” சாடிய ஜெயக்குமார் | Stalin
தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன் பேரில் அறிவழகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட காவல் கண்ணகிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து அறிவழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கண்டமங்கலம் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்