விழுப்புரம் : இந்திய நாட்டின் 76 வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.


சுதந்திர தின விழா:


இந்திய நாட்டின் 76-வது சுதந்திர  தின விழா வருகின்ற செய்யாக்கிழமை கொண்டபட உள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயிலில் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ரயில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில்களில் சோதனை மேற்கொண்டனர்.மேலும் வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய பார்சல்களை போலீசார் முழுமையாக சோதனை மேற்கொண்டு பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர். இதே போன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Aadi Krithigai 2023: புதுச்சேரி கவுசிக பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.