நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் பெறுக்கெடுத்து ஓடி வருகிறது. கரூர் மாவட்டத்த்தில் தொடர் மழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
‛கட்சிக்கு உதவ முடியாமல் தவிக்கிறேன்’ - பொதுவெளியில் புலம்பிய ப.சிதம்பரம்!
Gayle Leave in IPL 2021: ஐ.பி.எல். தொடரில் இருந்து திடீரென விலகிய கிறிஸ் கெயில்... காரணம் இது தான்!
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவையில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 2 மற்றும் 4ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்துள்ளது.
*Follow @ Google News: கூகுள் செ ய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மீண்டும் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
இதனால் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெற்றோர்கள் பள்ளிக்கு விடுமுறை வேண்டி பல்வேறு சமூக வலைதளங்களில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு செய்தி அனுப்பி வந்தநிலையில் இன்று காலை 8.45 மணி அளவில் கரூர் ஆட்சியர் ட்விட்டர் பக்கத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்ட நிலையில், நாளை காந்தி ஜெயந்தி மற்றும் அதனை தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்று கிழமைகள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.