தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்துக்கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு கடந்த 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், தமிழ்நாடு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். முன்னதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருணும், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரும் பொறுப்பேற்றனர். மேலும் படிக்க,


அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 17 மணி நேர சோதனைக்கு பின், அவரை கைது செய்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் ஓமந்துரார அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். பின் நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவிரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு பை பாஸ் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் படிக்க,


வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்,  மெய்தி இன மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே மாதம் பிரச்னை தொடங்கியது.  அதன் பின்னர் கலவரமாக மாறிய இந்த பிரச்னையால் இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது.  இதற்கிடையே, 'குகி' பழங்குடியின மக்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கக்கோரி, 'மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு' என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதேபோல் மணிப்பூர் ஐகோர்ட்டு பார் அசோசியேசன் உள்பட பலதரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து உச்ச நீதிமன்றம்  மேலும் படிக்க,


இன்று மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக இந்த திடீர் ஆலோசனை கூட்டம், 234 தொகுதிகளில் உள்ள முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு ஏன் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது. சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அதற்கு ஏற்றாற்போல கடந்த ஜூன் 17ம் தேதி கடந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். மேலும் படிக்க,


நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே வருகின்ற நவம்பர் தேர்தலுக்கு பிறகு, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் 5வது முறையாக பிரதமர் பதவிக்கு மார்க் ருட்டே வரும் வாய்ப்பு முடிந்துபோனது. 


நெதர்லாந்தில் மார்க் ருட்டே நான்கு கட்சிகளின் கூட்டணியில் பிரதமராக இருந்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு நெதர்லாந்து பிரதமராக பதவியேற்ற மார்க் ருட்டே கிட்டதட்ட 13 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். டச்சு வரலாற்றில் நீண்ட காலமாக பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர் மார்க் ருட்டே . மேலும் படிக்க,