எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு வித்தியாசமான அணுகுமுறைகளை  கையாள்வது பலரது வழக்கம். அதற்காக தங்களது கடைகளின் பெயர்களையோ, தங்களது நிறுவனங்களின் பெயர்களை வித்தியாசமாக வைப்பதை கையாள்வார்கள்.  குறிப்பாக, ஹோட்டல் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு வித்தியாசமான பெயர்களை சூட்டுவதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.


இந்த வரிசையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஒருவர் தன்னுடைய ஹோட்டலுக்கு வைத்துள்ள பெயர் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் உருவெடுத்து வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள வி.கே.புரத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்பட்ட வெங்கடேசன் ஹோட்டல் தொழிலை தேர்வு செய்துள்ளார்.




ஹோட்டலுக்கு பெயர் வைக்க பல பேரை தேர்வு செய்து எந்த பெயரிலும் திருப்தியில்லாத வெங்கடேசன், கடைசியாக தனது கொழுந்தியாக்கள் மேல் கொண்ட பாசத்தால் ஹோட்டல் கொழுந்தியா என்று பெயர் சூட்டியுள்ளார். கடந்த 6-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலுக்காக பாபநாசம் பகுதியில் அவர் ஒட்டியுள்ள விளம்பர போஸ்டர்தான் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.. ஹோட்டல் கொழுந்தியா என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை வைத்து, வடிவேலு மீம்ஸ்களை நமது நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க : Crime: கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்தார் - போலீஸ் விசாரணை


கணவனிடம் மனைவி வீட்டுக்கு வராம எங்கயா சாப்பிட போயிருந்த என்று கேட்பது போலவும், அதற்கு கணவன் கொழுந்தியா வீட்டு சாப்பாடு என்று சொன்னதும், மனைவி அடிக்க ஓடி வருகிறார். அவரது அடிக்கு பயந்த கணவன் அடியேய்... முழுசா கேளுடி என்று பயத்தில் அலறியடித்து ஓடுவதுபோல ஏராளமான மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.


இந்த ஹோட்டலுக்கு ஏன் இவ்வாறு பெயர் வைத்தீர்கள் என்று வெங்கடேசனிடம் நிருபர்கள் கேட்டபோது, ’தனக்கு 3 கொழுந்தியாக்கள் இருப்பதாகவும், கொழுந்தியாக்கள் மீது தந்தை போன்ற அன்பு இருப்பதை நினைவூட்டவுமே இந்த பெயரை தேர்வு செய்ததாகவும்’ கூறினார்.




மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல் 10 நாட்களுக்கு ஹோட்டலுக்கு வருபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என்றும் அறிவித்துள்ளார். வெங்கடேசனின் இந்த புது முயற்சிக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க : Watch Video: உஷார்.! இப்படியும் நடக்கும் விபத்து!! ஷாக்கிங் வீடியோவை பகிர்ந்து எச்சரிக்கை விடுத்த காவலர்!


மேலும் படிக்க : ABP Exclusive: அந்த ரத்தக்கறை உண்மைதான்.. ஆனால்..- ஸ்ரீமதி இறப்பு விசாரணை குறித்து பேசிய எஸ்.பி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண