ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


பொதுவாக பலருக்கும் வாழ்க்கையில் ஆபத்து, அதிர்ஷ்டம் போன்றவை எப்போது எந்த உருவத்தில் வரும் என்பது தெரியாது. அதனை நாம் கவனமாக கையாண்டால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கலாம். குறிப்பாக வீடுகளில் தான் நாம் சின்ன சின்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் புதர் இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கட்டிடத்தின் உறுதி தன்மை, வாகனங்களை கையாள்வது, ஆபத்தான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டும் இடத்தில் வைக்கக்கூடாது போன்ற விஷயங்களில் அதீத கவனம் வேண்டும். 


கட்டிப்பிடி வைத்தியத்தில் கல்லா கட்டும் நபர்! ஒரு மணி நேரத்துக்கு ரூ.7 ஆயிரம்! குவியும் மக்கள்


இதுதொடர்பான விழிப்புணர்வு பதிவுகளை பல துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரியான டாக்டர்.ஸ்டாலின் என்பவர் அடிக்கடி பல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவுகளை வெளியிடுவார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு தந்தை தனது இரு பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் வீட்டை விட்டு கிளம்புகிறார். வீட்டு கேட்டுக்கு வெளியே சென்று பைக்கை ஆஃப் செய்யாமல் கீழே இறங்கி கதவை மூட வருகிறார். 






அப்போது அவரது பிள்ளைகளில் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆக்ஸிலேட்டரை திருக பைக் விபத்தை சந்தித்தது. நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவிக்கு ஓடி வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனை பதிவிட்டு இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்துச்சென்று நிறுத்தும் போது கண்டிப்பாக இயங்கிய நிலையில் நிறுத்த வேண்டாம், நிறுத்தி சாவியை எடுத்து செல்லவும், உங்களின் கவன குறைவால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. என தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண