கன்னியாகுமரிமாவட்டம் நாகர்கோவிலில் கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு வாகனத்தில் விரைந்து வந்த தீ அணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர்.
 
குமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் தனியார் கொரியர் நிறுவனம் உள்ளது. இந்த கொரியர் நிறுவனத்தின் மேலாளராக நாகர்கோவில் கலை நகரை சேர்ந்த தனேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் 7 மணிக்கு வழக்கம் போல் கொரியர் நிறுவனத்தை தனேஷ் திறந்து உள்ளார். கொரியர் நிறுவனத்தில் வெளியூரில் இருந்து வந்த ஏராளமான பொருட்கள் இருந்தது. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு அனுப்ப பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. தனேஷ் சிறிது நேரம் கொரியர் நிறுவனத்தை திறந்து வைத்துவிட்டு மீண்டும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
 
 
 
பின்னர் காலை 8.30 மணிக்கு கொரியர் நிறுவனத்தை திறக்க வந்த போது நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்தது. இதனை தொடர்ந்து கொரியர் நிறுவனத்தை திறந்து பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொரியர் நிறுவனத்தில் எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கொரியர் நிறுவனத்தில் இருந்த பொருட்களை அனைத்தும் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அருகாமையில் உள்ள கட்டடங்களில் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். அதற்குள் பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
 
 
முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொரியர் நிறுவனத்தில் வேறு ஊர்களுக்கு அனுப்ப வைத்திருந்த பொருட்கள் ஆவணங்கள் உட்பட பல பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் தீ விபத்தால் எரிந்து சாம்பலானதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

Continues below advertisement

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண